முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!"
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.






