தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விஇ ரோட்டில், ஒரு தனியார் ஓட்டல் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின கீழ் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை உடைத்து குடிநீர் பைப் லைன் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் அந்த சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டனர்.

தூத்துக்குடி தாமோதரன்நகர் மெயின் ரோட்டிற்கு திரும்பி செல்பவர்கள் இந்த பகுதியில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்ட அந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story