சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து

திருச்சி கோட்டை- ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
சேலம்,
திருச்சி கோட்டை- ஜங்சன் இடையே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி சேலம்-கரூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76821), மயிலாடுத்துறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16811), சேலம்-மயிலாடுத்துறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16812) ஆகிய 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





