தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடல் பட்டாசு கடைகளில் விற்பனை தொடக்கம்


Sales begin at Chennai theevu thidal fireworks shops
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Oct 2025 11:20 AM IST (Updated: 13 Oct 2025 11:21 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு விற்பனையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கிவைத்தார்.

சென்னை,

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கான பட்டாசு விற்பனையை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் 30 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளில் பட்டாசு விற்பனையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கிவைத்தார்.

இந்தக் கடைகளில் பட்டாசு விற்பனை வரும் 21-ந் தேதி வரை நடைபெறும். பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனமும், 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story