திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் வேண்டி சமத்துவபுர மக்கள் சாலை மறியல்

வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் பட்டாக்களை வழங்கியதாக சமத்துவபுர மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை அருகே உள்ள சமத்துவபுர மக்கள் தமிழக, ஆந்திர சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என சமத்துவபுர மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அந்த நிலத்தில் வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வசிக்க அதிகாரிகள், பட்டாக்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Related Tags :
Next Story






