அ.தி.மு.க.வினருக்கு சசிகலா திடீர் அழைப்பு


அ.தி.மு.க.வினருக்கு சசிகலா திடீர் அழைப்பு
x
தினத்தந்தி 30 Aug 2025 11:36 PM IST (Updated: 31 Aug 2025 5:36 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்

சென்னை,

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. இன்றைக்கு பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

மனமாச்சர்யங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம், கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் வெற்றி முக்கியம், அதனால்தான் அ.தி.மு.க. ஒன்றுபடவேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன். எனக்கு அ.தி.மு.க.வினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை.

உங்களில் ஒருத்தியாக, உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கட்சி பணியாற்றவே நான் விரும்புகிறேன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட அ.தி.மு.க. வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன். இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும்.

எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவது தான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.

ஒன்றுபட்ட வலிமைமிக்க அ.தி.மு.க.வை தமிழக மக்களும், தொண்டர்களும், அனைவரும் விரும்புகிறார்கள். பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அ.தி.மு.க. என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

மீண்டும் எனவே, கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம். வாருங்கள். அனைவரும் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story