காஞ்சிபுரத்தில் பரபரப்பு: பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சிறுவர்கள் கைது

கோப்புப்படம்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 2 மாணவர்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரும், 19 வயது இளைஞரும் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள், இளைஞர் என 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சிறுவர்கள் - சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டநிலையில், இளைஞர் - சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story