கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் புகழாரம்


கோடு போட சொன்னால் செந்தில் பாலாஜி ரோடு போட்டுள்ளார்:  மு.க.ஸ்டாலின் புகழாரம்
x

பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி என்று ஸ்டாலின் கூறினார்.

கரூர்,

திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இன்று திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்த முப்பெரும் விழாவிற்காக 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலின் வரும் வழியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்திற்கு மத்தியில் ஸ்டாலின் வாகனத்தில் ரோடு ஷோ போல வருவதற்காக வழி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் செந்தில் பாலாஜி.

பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார். ரோடு போட்டு அந்த ரோடு மேலதான் நான் வாகனத்தில் வந்தேன். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்க கூடியவர்தான் செந்தில் பாலாஜி. அதனால்தான் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்கபார்த்தார்கள். ஆனால் அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாகமுடித்துக்காட்டுவார். நான் உறுதியாக சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியெரு பிரமண்டமான முப்பெரும் விழா நடைபெற்று இருக்காது” என்றார்.

1 More update

Next Story