கார் மீது டிப்பர் லாரி மோதல்: நிகழ்விடத்திலேயே 7 பேர் பலியான சோகம்


கார் மீது டிப்பர் லாரி மோதல்: நிகழ்விடத்திலேயே  7 பேர் பலியான சோகம்
x
தினத்தந்தி 17 Sept 2025 2:18 PM IST (Updated: 17 Sept 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்

நெல்லூர்,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெரமனா என்ற இடத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவறான பாதையில் சென்ற டிப்பர் லாரி கார் மீது மோதியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மோதிய வேகத்தில், டிப்பர் லாரி காரை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிப்பர் லாரி மோதியதில் ஏழு பேர் நிகழ்விடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது

1 More update

Next Story