வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - விவசாய நிலங்கள் பாதிப்பு


வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - விவசாய நிலங்கள் பாதிப்பு
x

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி,

தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச் செல்வதால் கவனமாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்த‌து. மேலும் சில இடங்களில் சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story