சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.
சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
Published on

திருவள்ளூர்,

திருத்தணி ஜெ.ஜெ.ரவி நகர் பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு ஜெ.ஜெ.ரவி நகர் வழியாக சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவி சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிடவே மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது திருத்தணி ஒன்றியம் வீரகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 21) என்பதும், இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மோகனை நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com