மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. உயிரிழப்பு


மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. உயிரிழப்பு
x

மின்சார கம்பி மீது கொடிக் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.

ராமநாதபுரம்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (வயது 36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story