சிவகங்கை கல்குவாரி விபத்து... பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு


சிவகங்கை கல்குவாரி விபத்து... பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 May 2025 9:20 AM IST (Updated: 22 May 2025 11:45 AM IST)
t-max-icont-min-icon

எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில் பலர் சிக்கிக்கொண்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல நேற்று வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் மற்றும் கற்கள் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் கீழவளவு ஈ.மலம்பட்டியை சேர்ந்த ஆண்டிசாமி(50), சேவல்பட்டியை சேர்ந்த கணேசன்(47), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் (28), உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மல்லாக்கோட்டை ஓடைப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (வயது 47), கீழவளவு ஈ.மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (52), தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்(47) ஆகியோரை நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு மீட்டனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்(47) எனபவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story