குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 2.10.2025 அன்று சூரசம்காரம் மற்றும் 3.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் திருவிழாவை அமைதியாக நடத்தியதற்காக சுமார் 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேற்சொன்ன தசரா திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று தனிப்பிரிவு காவல்துறையினர், தொழில்நுட்ப பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆகிய போலீசாரை வாழ்த்தி பாராட்டினார்.
Related Tags :
Next Story






