புலிகள் நுழைந்தவுடன் அணிலை காணவில்லை - சீமான்

காந்தி படம் மட்டுமே செல்வம் அல்ல. அது வெறும் தாள் என்று சீமான் பேசினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: "அந்த காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு, இவர்களுக்கு என்ன மறை கழன்றுவிட்டதா என்று சிலர் கேட்பார்கள். மறை கழன்றதால் அல்ல மறையை கற்றதால் இந்த மாநாடு நடத்தியுள்ளோம்.
நாட்டிற்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டிற்காக நிற்போர் இதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஓட்டுக்காக நிற்பவர்கள் இதை நினைத்து கூட சிந்திக்க மாட்டார்கள். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்களால் தான் இந்த மாநாட்டை நடத்துவார்கள். நடத்த முடியும். அரசு மரம் நடுவோம், மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். எது செல்வம் செயல் அரசியல், சேவை அரசியல் செய்பவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள்.
செய்திகளுக்காக அரசியல் செய்வோர் இந்த அரசியலை செய்ய மாட்டார்கள். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள். மக்களுக்கான அரசியல் எவன் செய்கிறானோ அவன் தான் இந்தப் பணிகளை செய்வான்" என்றார்.






