சென்னையில் இன்று 10 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்


சென்னையில் இன்று  10 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
x

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

சென்னை

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (20.08.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (20.08.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-19க்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. மாத்தூர், 2வது பிரதான சாலையில் உள்ள ராயல் பேலஸ், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-26க்குட்பட்ட மாதவரம் பால் காலனியில் உள்ள தனுவாஸ் மினி ஹால், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-57க்குட்பட்ட ஆதியப்பா தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-70க்குட்பட்ட பெரம்பூர், பந்தர் கார்டன் பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-87க்குட்பட்ட பாடி, கம்பர் தெருவில் உள்ள அன்னை மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-115க்குட்பட்ட இராயப்பேட்டை, ஜானி ஜஹான் கான் சாலையில் உள்ள பிரசன்டேசன் ஆலய சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-131க்குட்பட்ட அசோக் நகர், ருக்மணி தெருவில் உள்ள ஜி.ஆர்.டி. வாகன நிறுத்துமிடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-149க்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர், தாக்கூர் தெருவில் உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-187க்குட்பட்ட பாலய்யா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-193க்குட்பட்ட துரைப்பாக்கம், சி.எல். மேத்தா கல்லூரி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 More update

Next Story