சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - துணை முதல்-அமைச்சர்
துறை வாரியாக அரசின் திட்டங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துறை வாரியாக அரசின் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story