தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னை,
சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






