கல்வி உதவித்தொகையில் வாங்கிய ஆடு இறந்த சோகத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு


கல்வி உதவித்தொகையில் வாங்கிய ஆடு இறந்த சோகத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு
x

தான் ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் மாணவன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

நரிக்குடி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மைலி இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 18). அரசு ஐ.டி.ஐ.,யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவருக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையை சேமித்து வைத்து செம்மறி ஆடு ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். இந்நிலையில் கனமழையால் அந்த ஆடு இறந்து போனது.

தான் ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் செந்தில்குமார் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். திடீரென விபரீத முடிவெடுத்து பூச்சிகொல்லி மருந்தை குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு இறந்த துக்கத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை துயரம் அடையச்செய்தது.

1 More update

Next Story