தோழிகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி


தோழிகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி
x

கோப்புப்படம் 

தோழிகள் குளிப்பதை மாணவி செல்போனில் வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவிகள் தங்கியிருந்தனர். இதில் ஒரு மாணவி மற்றொரு மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி செல்போனில் படம் பிடித்த மாணவியிடம் இது குறித்து கேட்டார். அப்போது அவர் வீடியோ எடுத்து அவருடைய காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாணவிகள் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்லால் (27 வயது) என்பவரை போலீசார் கைது செய்து மாணவிகளை மிரட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story