சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ: திருப்பூரில் பரபரப்பு

தாராபுரம் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சொர்ண ராஜ். இவர் குண்டடம் பகுதியில் இருந்து தனது உறவினர்களை தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தெக்கலூர் அருகே தனியார் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு மீண்டும் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன்பக்கம் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்ட பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சொர்ண ராஜிடம் தெரிவித்தனர்.
இதை அடுத்து ஐடியை விடுதி அருகே காரை நிறுத்திவிட்டு பார்க்கும் போது காரில் தீ மலமலவென பரவி சேதமடைந்தது. காரின் முன்பக்க பகுதி முழுவதும் முற்றிலுமாக எரிந்து சேதமானது. காரில் பயணம் செய்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். தாராபுரம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






