மனைவியின் நடத்தையில் சந்தேகம்...மதுபோதையில் கணவர் செய்த வெறிச்செயல்

சந்தேகத்தால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்...மதுபோதையில் கணவர் செய்த வெறிச்செயல்
Published on

சென்னை,

படப்பை அடுத்த சாலமங்கலம் ஆத்ணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் டிரைவர். இவரது மனைவி நந்தினி (வயது29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கங்காதரனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த கங்காதரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மனைவி நந்தினியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நந்தினி பக்கத்து தெருவில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த கங்காதரன் அங்கும் சென்று மனைவியுடன் மோதலில் ஈடுபட்டார். திடீரென கங்காதரன் வைத்திருந்த கத்தியால் மனைவி நந்தினியின் மறைத்து கழுத்தில் குத்தினார். மேலும் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த நந்தினி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com