தாம்பரம்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


தாம்பரம்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

கோப்புப்படம்

சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர சிறப்பு ஏசி ரெயில் சேவை ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்படும், (06035) மறுநாள் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும்.

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.25 மணிக்கு புறப்படும் ரெயில் (06036) மறுநாள் காலை 07:40 மணிக்கு தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 More update

Next Story