தமிழக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கை - 4 மனித கடத்தல் ஏஜெண்ட்டுகள் கைது

மியான்மரில் உள்ள இணைய மோசடி முகாமில் இருந்து 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சமூக வலைதளங்கள் மற்றும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களின் மூலம் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு சட்டவிரோதமாக மியான்மருக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு மோசடி முகாம்களில் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டு, இலக்கை அடையாதவர்களுக்கு உடல் வன்முறை, அபராதம் போன்ற தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி வரும் இத்தகைய சர்வதேச இணையமோசடிகளை தடுக்கும் நோக்கில் தமிழக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு ‘புளூ டிரையாங்கிள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 4 மனித கடத்தல் ஏஜெண்ட்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் மியாவடி பகுதியில் உள்ள ‘கே கே பார்க்’ இணைய மோசடி முகாமில் இருந்து 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






