தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு

கைதானவர்களை படகுடன் விடுவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தமிழக மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவு
Published on

தஞ்சை,

தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவைச் சேர்ந்த, வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான, பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த, 25 40 வயதுடைய மூவர் கடந்த 11-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கசென்றனர்.அதேபோல், கள்ளிவயல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த, மக்கான் முகமது என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், 28 34 வயதுடைய, நான்கு பேர், மீன் பிடிக்க சென்றனர்.அவர்கள், ஏழு பேரும், 16-ம் தேதி காலை, மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, மீனவர்கள், ஏழு பேரையும் கைது செய்து, இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், கடந்த அக்.16ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான தஞ்சை மீனவர்கள் 3 பேரையும் படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை எல்லைக்குள் சென்றதாக கைதான மீனவர்களை விடுவித்து படகுடன் திருப்பி அனுப்ப இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com