கராத்தே போட்டியில் வென்ற தமிழக மாணவர்கள்; ரெயிலில் வந்தபோது பதக்கம், சான்றிதழ்கள் திருட்டு

சான்றிதழ்கள் திருடப்பட்டது குறித்து ஆன்லைன் மூலம் ரெயில்வே நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி,
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்தியோதயா ரெயிலில் ஊர் திரும்பினர்.
ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் கண்ணயர்ந்த சமயத்தில் மாணவர்களின் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் துணிகள் அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து ஆன்லைன் மூலம் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






