புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயங்களை பரிசளித்த தவெக தலைவர் விஜய்


புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயங்களை பரிசளித்த தவெக தலைவர் விஜய்
x

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வெள்ளி நாணயங்களை பரிசளித்துள்ளார்.

சென்னை,

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் மும்முரமாக தயாராகி வருகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை அக்கட்சி தீவிரப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கு 120 மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழகம் இன்று அறிவித்துள்ளது. மேலும், புதிய நிர்வாகிகளையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வெள்ளி நாணயங்களை பரிசளித்துள்ளார்.

1 More update

Next Story