குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழரை மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் - டிடிவி தினகரன்

குவைத் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குவைத் நாட்டில் பணிபுரிந்துவந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்கா பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகனை கடந்த 15-ம் தேதி அந்நாட்டு காவல்துறை கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குவைத் நாட்டில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேல்முருகன் திடீரென கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் குடும்பத்தினரும், உறவினர்களும் தவித்து வருகின்றனர்.

எனவே, இந்திய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டு குவைத் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com