தென்காசி: செங்கல் லாரி மோதி 11 மாடுகள் உயிரிழப்பு


தென்காசி: செங்கல் லாரி மோதி 11 மாடுகள் உயிரிழப்பு
x

விபத்தில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன.

தென்காசி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே, பேச்சியப்பன் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். கடையநல்லூரில் சாணம் உரத்துக்காக தோப்புகளில் அடைத்துவிட்டு, சிவகிரியை நோக்கி மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் மாடுகளுடன் சாலையைக் கடந்து சென்றார்.

அப்போது சாலையில் வேகமாக வந்த செங்கல் லாரி மாடுகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்து மாடுகளை அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை - தென்காசி தேசிய சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story