தென்காசி: ஆட்டோ-பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 5 பேர் காயம்


தென்காசி:  ஆட்டோ-பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 5 பேர் காயம்
x

தென்காசியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பஸ்சும் இன்று நேருக்கு நேராக மோதியதில் 5 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

தென்காசி

தென்காசிக்கு உட்பட்ட புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது. அப்போது, அரசு பஸ் ஒன்று எதிரே வந்துள்ளது. திடீரென ஆட்டோவும், பஸ்சும் நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த 5 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புளியங்குடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story