

தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருச்செந்தூரில் இருந்து பாரத உழவார பணிக்குழுவை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உழவார பணி செய்தனர். வேல், மணி வகைகள், பாத்திரங்கள், சுவாமி திருமேனிகள் போன்றவற்றை பாலிஷ் செய்து புதுப்பித்தனர்.
அடிவாரம் மற்றும் மலை மீது சென்று கோவில் பிரகாரத்தை சுத்தம் செய்தனர். ஜெயக்குமார் தலைமையில், செயலாளர் ரங்கன், பொருளாளர் கிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.