சேலம் அருகே மூதாட்டி நகைகளை, காது - மூக்கோடு மர்மநபர்கள் அறுத்து சென்ற கொடூரம்


சேலம் அருகே மூதாட்டி நகைகளை, காது - மூக்கோடு மர்மநபர்கள் அறுத்து சென்ற கொடூரம்
x
தினத்தந்தி 21 May 2025 8:18 AM IST (Updated: 21 May 2025 12:53 PM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கல்லால் தாக்கிக்கொலை செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே சின்னேரிகாடு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 68). இவர் விவசாயம் செய்து வந்ததுடன் மாடுகளையும் வளர்த்து வந்தார். வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் சரஸ்வதியை தேடி அவரது விவசாய நிலத்துக்கு சென்றனர்.

அங்கு தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி பிணமாக கிடந்தார். அவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அவரது காது, மூக்கு ஆகிய உறுப்புகள் நகையுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சரஸ்வதி மூக்குத்தி, தோடு என ஒரு பவுன் நகை அணிந்து இருந்துள்ளார். அந்த நகைக்காக அவரை கொடூரமாக கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. சரஸ்வதி கொலை நடந்த பகுதியில் வெளிநபர்கள் யாராவது வந்து சென்றனரா? அல்லது அதே பகுதியில் உள்ளவர்கள் நகைக்கு ஆசைப்பட்டு இந்த கொலையை செய்தனரா? என்பது தெரியவில்லை.

சரஸ்வதி ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டன. எனவே அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தற்போது கொலை தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story