செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x

செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் செந்தில்பாலாஜி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. அமலாக்கத்துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக மனுவை செந்தில்பாலாஜி தரப்பில் அளிக்கப்பட்டது.

இதில், ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகிதான் ஆக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதிக்கு அவர் தள்ளி வைத்தார்.

1 More update

Next Story