மண்டியிடச் செய்யும் வேலையை மோடி அரசு அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன்

மண்டியிடச் செய்யும் வேலையை மோடி அரசு அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்றும் செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சமும் வழங்கப்படும். ஒவ்வொரு மொழிக்கும் தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாகித்ய அகாதமி போன்ற புகழ்மிக்க கலாச்சார நிறுவனத்தை மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய அளவில் தன்னாட்சி அமைப்புகளை சிதைக்கப்பட்டால் மாநிலங்கள் உரிய படைப்புகளை தேசம் முழுவதும் கவனம் பெறுவதைப் போன்று உயர்த்திப் பிடிக்கும். இது பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






