2026 தேர்தலில் திமுக அரசுக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை


2026 தேர்தலில் திமுக அரசுக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை
x

பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள். தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story