விக்டோரியா பொது அரங்கத்தினை ஆன்லைனில் பதிவு செய்து பொது மக்கள் பார்வையிடலாம் - சென்னை மாநகராட்சி


விக்டோரியா பொது அரங்கத்தினை ஆன்லைனில் பதிவு செய்து பொது மக்கள் பார்வையிடலாம் - சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 3 Jan 2026 10:47 AM IST (Updated: 3 Jan 2026 10:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக, ஆன்லைனில் பதிவு செய்து விக்டோரியா பொது அரங்கத்தினை பொது மக்கள் பார்வையிடலாம்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் தொன்மையின் சின்னமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 23.12.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரங்கத்தினை தினசரி காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 6 காட்சி நேரங்களில் (slots) அதாவது 8.30 மணி முதல் 6.30 மணி வரை, 10 மணி முதல் 11.30 மணி வரை, 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2 மணி முதல் 3.30 மணி வரை, 3.30 மணி முதல் 5 மணி வரை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்து பார்வையிடலாம்.

இதற்கான கட்டணம் இந்திய குடிமக்களுக்கு ரூபாய் 25/-, மாணவர்களுக்கு ரூபாய் 10/- (அடையாள அட்டை அவசியம்), மூத்த குடிமக்களுக்கு ரூபாய் 10/-, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூபாய் 50/- ஆகும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பள்ளி மூலம் மின்னஞ்சல் வாயிலாக முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்க்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் இலவசமாகும்.

அரங்கத்திற்கான வாடகை - கட்டண விவரம்

1. கல்வி / அரசு / உள்ளூர் கலைஞர்கள் / புத்தக வெளியீடு / பாரம்பரிய நிகழ்வுகள் / பட்டிமன்றம் / கலந்துரையாடல்

பிரதான அரங்கம் : ரூபாய் 50,000 /- (ஒரு நாள்) + மின்கட்டணம்

மேடை, கலைஞர் அறை (Green Room), முக்கிய பிரமுகர் அறை, அடிப்படை ஒளி மற்றும் ஒலி வசதிகள்.

பாதுகாப்புத் தொகை : ரூபாய் 25,000 /-

2. பன்னாட்டு நிறுவனங்கள் / வர்த்தக / சினிமா நிகழ்வுகள்

பிரதான அரங்கம் : ரூபாய் 1,00,000 + மின்கட்டணம்

மேடை, கலைஞர் அறை (Green Room), முக்கியப் பிரமுகர் அறை, அடிப்படை ஒளி மற்றும்

ஒலி வசதிகள் உட்பட

பாதுகாப்புத் தொகை : ரூபாய் 50,000 /-

திறந்த வெளி அரங்கம் (Amphitheatre) : நாள் ஒன்றுக்கு ரூபாய் 10,000 /- + மின்கட்டணம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story