தேனி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கொலை - 2 பேர் கைது


தேனி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கொலை - 2 பேர் கைது
x

இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் டூரிஸ்ட் வேன்கள் உரிமையாளர் பிரபாகரன். இவர், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், அதே பகுதியை சேர்ந்த ஜெயசித்ரா என்பவரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதனால், ஜெயசித்ராவின் கணவர் சுருளி மணி அவரது மைத்துனர் முத்துராஜா என்பவருடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சின்னமனூர் காவல்துறையினர், சின்னமனூரில் இருந்த சுருளி மணி மற்றும் முத்துராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story