தேனி: பைக்கில் இருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி

கோப்புப்படம்
பாம்பை பார்த்ததும் பிரேக் பிடித்த ஹரிகிருஷ்ணனின் மணிக்கட்டை குறிவைத்து பாம்பு கொத்தியது.
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் எலக்டிரிஷியன் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் தனது நணபர் ராம்குமாருடன் நேற்று இரவு சுருளிப்பட்டி மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கின் முன்புறம் திடீரென பாம்பு ஒன்று வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாம்பை பார்த்ததும் பிரேக் பிடித்த ஹரிகிருஷ்ணனின் மணிக்கட்டை குறிவைத்து பாம்பு கொத்தியது. இதனால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






