"மோடி மாதிரி தலைவர் யாரும் இல்லை...இன்னும் 20 ஆண்டுகள்'- இளையராஜா


There is no leader like Modi - Ilayaraja
x
தினத்தந்தி 28 April 2025 9:27 PM IST (Updated: 28 April 2025 9:29 PM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

'இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களின் பெயர்களை எழுதுங்கள். மவுண்ட் பேட்டன் காலத்தில் இருந்து அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள். மற்றொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.

1988-ம் ஆண்டு நான் முதன்முதலில் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் இடம்போல காட்சியளிக்கும். ஆனால், இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. இதை யார் செய்தது. கங்கை நதி மிகவும் சுத்தமாக நீர். அதில் மக்கள் அசுத்தங்களை செய்துகொண்டிருந்தனர்.

மோடிதான் சரியான திட்டமிடலுடன் அதனை சரி செய்தார். இன்னும் அதற்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மீது பற்று இல்லாத ஒருவரால் இதை செய்யவே முடியாது. நான் முன்பே சொன்னதுபோல மற்ற பிரதமர்கள் செய்ததையும் மோடி செய்ததையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும்.

ஒரு வேளை நமக்கு மோடி தேவையில்லை என்றால், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி யாராது இருக்கிறார்களா?. இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்' என்றார்.

1 More update

Next Story