‘ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை’ - சச்சின் பைலட்

தி.மு.க.வின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்துள்ளன என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தீவிரமாக பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தமிழகத்திற்கு வருகை தண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. அந்த வகையில், தமிழக மக்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் தமிழக அரசியலில் ஒருபோதும் காலூன்ற முடியாது. தி.மு.க. அரசு நன்றாக செயலாற்றி உள்ளது. தி.மு.க.வின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்துள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






