தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
Published on

தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப் 2, டைப் 1 பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (வயது 58). இவர் அனல்மின் நிலையத்தில் பேர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மேல சண்முகபுரத்தில் வசித்து வரும் அவரது மகள் அனுஷாவுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அவர் அங்கு வந்து பார்த்தபேது முருகேசன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் பேலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசேதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தெர்மல்நகர் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com