10 வருடத்தில் இது நடக்கும் - சீமான்


10 வருடத்தில் இது நடக்கும் - சீமான்
x

நாங்கள் தேர்தல் அறிக்கை கொடுப்பதில்லை. அது பயனற்றது என சீமான் கூறியுள்ளார்.

காரைக்குடி,

காரைக்குடியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

`பெட்டி கடையில் தொடங்கி காட்டு வேலை வரை எல்லா இடங்களிலும் வடஇந்தியர்கள் வந்துவிட்டார்கள். சும்மா இரு காசு தர்றேனு, நம்மை நுட்பமாக உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். இங்கே வாக்குரிமை வாங்குவார்கள், தானாக அவர்களுக்கு அதிகாரம் போய்விடும். ஏற்கெனவே அடிமையாக இருக்கும் நாம் மேலும் அடிமையாகி விடுவோம். நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு அடித்து விரட்டப்படுவோம். இது 10 வருடத்தில் நடக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தில் வட மாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நாம் வன்முறையை ஊக்கப்படுத்தவில்லை. அது பிழை. நாங்கள் தேர்தல் அறிக்கை கொடுப்பதில்லை. அது பயனற்றது. ஆட்சியை எப்படி நடத்துவோம் என்பதன் செயல்பாட்டு வரைவுதான் நாங்கள் கொடுப்போம். இந்த தேர்தலுக்கும் வெளியிடுவோம் என்றார்.

1 More update

Next Story