தூத்துக்குடி: காயாமொழி ஊராட்சியில் மேல்நிலை நீர்த் தொட்டியை திறந்து வைத்தார் கனிமொழி எம்.பி.

ரூ.34 லட்சம் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி
இன்று (03/09/2025) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழி ஊராட்சியில் உள்ள ஆதித்தனார் காலனியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






