தூத்துக்குடி: 7 அடி குழியில் விழுந்த சினை பசு மீட்பு


தூத்துக்குடி: 7 அடி குழியில் விழுந்த சினை பசு மீட்பு
x

புதுக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் சினை பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுபாடு விஜிபி நகரில் புதியதாக வீடு கட்ட வானம் தோண்டிய குழியில் ஆனந்தன் என்பவரது சினை பசு மாடு கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த பசு மாட்டின் உரிமையாளர் ஆனந்தன் சிப்காட் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தை தொடர்பு கொண்டு பசு மாட்டினை மீட்டுத் தருமாறு உதவி கோரினார்.

உடனடியாக சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கிராஜன், தவசி, ராம்குமார், முத்து ஜெயக்குமார் வெங்கிடசாமி ஆகிய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து 5 அடி நீளம் மற்றும் அகலம், 7 அடி ஆழம் உள்ள குழியில் விழுந்து கிடந்த சினை பசு மாட்டினை கயிறுகளால் கட்டி ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். எந்த வித காயமுமின்றி சினை பசு மாட்டினை மீட்ட சிப்காட் தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

1 More update

Next Story