ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி தகராறு: தடுத்து நிறுத்திய எஸ்.ஐ.க்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பாக 2 பேர், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி தகராறு: தடுத்து நிறுத்திய எஸ்.ஐ.க்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
Published on

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தரணியா நேற்று, திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மஹால் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடை முன்பாக 2 பேர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தும், மேலும் காயம்பட்ட 2 பேரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் துரிதமாக செயல்பட்டார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்சொன்ன சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியும், காயம் பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் சிறப்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தரணியாவை நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com