பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மூன்று மாணவிகள் சாணிப் பவுடர் குடித்ததால் பரபரப்பு


பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மூன்று மாணவிகள் சாணிப் பவுடர் குடித்ததால் பரபரப்பு
x

ஆசிரியர்களிடம் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் மூன்று பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது இதனால் மாணவிகள் மூன்று பேரும் சாணி பவுடர் கரைசலை குடித்து உள்ளனர்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயக்கமுற்றுள்ளனர் பதறிய ஆசிரியர்கள் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு வந்த ஆசிரியர்களிடம் மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் எங்களுக்கு தகவல் அளித்தால் நாங்கள் அவர்களை கண்டிப்போம் ஆனால் நீங்கள் திட்டினீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

1 More update

Next Story