திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வெள்ளூர், வேத கோவில் தெருவை சேர்ந்த சுளி(எ) சுரேஷ் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சுரேஷை தாலுகா காவல் நிலைய போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story






