திருப்பூர்: கார் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

திருப்பூர் அருகே கல்லூரி மாணவர் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூரை சேர்ந்தவர் நித்தின். இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சலவை பட்டறை அருகே வந்து கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வேகமாக வந்த கார் பைக் மீது உரசியது. பின்னர் காரானது அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் நித்தின் தடுமாறி கீழே விழுந்தார். கல்லூரி மாணவர் தலையில் கெல்மெட் அணிந்திருந்ததால் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பினார். இருப்பினும் நிதினின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பலத்த காயமடைந்த தித்தினை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.
Related Tags :
Next Story






