திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 25 Nov 2025 4:05 PM IST (Updated: 25 Nov 2025 5:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கார்த்திகை தீபத்திருவிழாவை காண உள்ளூர், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 3ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவிலை சுற்றியும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக உடனடி பாஸ் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோவிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 மருத்துவக்குழுக்களை நியமிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story