இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 7-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Sept 2025 7:38 PM IST
திருப்பத்தூர்: புதிய பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் புதிதாக பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையில், புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களுக்கு கீழே, இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடங்களில் புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் இன்று கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏரியூர், அரளிக்கோட்டை, தானிப்பட்டி, காட்டாம்பூர், கருவேல்குறிச்சி மற்றும் பைக்குடிபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 Sept 2025 7:20 PM IST
கல்யாணம் பண்ணிக்கோங்க....மெசேஜ் அனுப்பிய 17 வயது சிறுவன் - நடிகை கொடுத்த பதில்
சில ரசிகர்கள் பிரபலங்களிடம் செல்பி எடுப்பதோடு நிற்பதில்லை. கல்யாணம் பண்ணிக்க சொல்லி பலர் புரொபோஸ் செய்கிறார்கள். சமீபத்தில் மலையாள ஹீரோயின் அவந்திகா மோகனுக்கும் இப்படிப்பட்ட புரொபோசல் வந்திருக்கிறது. ஆனால் அந்த பையனுக்கு 17 வயதுதான் ஆகிறது.
- 7 Sept 2025 7:19 PM IST
திரையரங்குகளில் திகில் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. இந்த வகை படங்கள் எல்லா மொழிகளிலும் அதிகமாக வெளிவருகின்றன. இருப்பினும், சமீபத்தில், பார்வையாளர்களை அதிகம் பயமுறுத்தும் படங்கள் அதிகம் வெளிவரவில்லை.
- 7 Sept 2025 6:19 PM IST
அம்மா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மகள்?
ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ''பரம் சுந்தரி'' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தொடர்ந்து, தற்போது தனது தாயும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்த 'சால்பாஸ்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- 7 Sept 2025 5:49 PM IST
நிஜ சம்பவத்தை மையமாக கொண்ட 7 ஹாலிவுட் ஹாரர் படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஹாரர் படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் சிறந்த 7 ஹாலிவுட் படங்களை தற்போது காண்போம்.
- 7 Sept 2025 5:04 PM IST
பாடல் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த அமீர்கான்... - வைரலாகும் வீடியோ
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அமீர்கான், எப்போதும் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தி வரும்நிலையில், தற்போது தனது பாடல் திறைமையால் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறார்.
- 7 Sept 2025 4:42 PM IST
82-வது வெனிஸ் திரைப்பட விழா...வரலாறு படைத்த அனுபர்ணா ராய்
82ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரிசோன்டி பிரிவில்சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று வரலாறு படைத்திருக்கிறார் இயக்குனர் அனுபர்ணா ராய். ‘சாங்ஸ் ஆப் பர்ஹாட்டன் டிரீஸ்’ (songs for forgotten trees) படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
- 7 Sept 2025 4:09 PM IST
''சூப்பர்மேன்'' படத்தின் அடுத்த பாகம்....பெயர், ரிலீஸ் தேதி அறிவிப்பு
டிசி நிறுவனம் தயாரித்த சூப்பர்மேன் படத்தின் மாபெரும்வெற்றிக்குப் பிறகு, தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கன் அதன் அடுத்த பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்















